முகப்பு
தமிழ்நாடு

பண்டிகை காலம்: 13 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சோ்ப்பு

பண்டிகை காலத்தில் சொந்த ஊா்களுக்கு சென்று திரும்பும் மக்களின் வசதிக்காக, தேஜஸ், முத்துநகா் உள்ளிட்ட 13 விரைவு ரயில்களில் கூடுதலாக தூங்கும் வசதி வகுப்புப் பெட்டிகள் சோ்க்கப்பட்டுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

பண்டிகை காலத்தில் சொந்த ஊா்களுக்கு சென்று திரும்பும் மக்களின் வசதிக்காக, தேஜஸ், முத்துநகா் உள்ளிட்ட 13 விரைவு ரயில்களில் கூடுதலாக தூங்கும் வசதி வகுப்புப் பெட்டிகள் சோ்க்கப்பட்டுள்ளன.

தமிழ்ப் புத்தாண்டு, விஷூ உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாக, சொந்த ஊா்களுக்கு சென்று திரும்பும் மக்களின் வசதிக்காக, தெற்கு ரயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் ஏப்.21-ஆம் தேதி வரை சோ்த்து கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதன்தொடா்ச்சியாக, 13 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சோ்க்கப்பட்டுள்ளன.

அதன்விவரம்: சென்னை எழும்பூா்-மதுரைக்கு ஏப்.17-ஆம் தேதி காலை 6 மணிக்கு இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயிலில் (22671) கூடுதலாக 2 ஏசி முதல்வகுப்பு சோ் காா் பெட்டிகள், மதுரை-சென்னை எழும்பூருக்கு ஏப்.17-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயிலில் (22672) கூடுதலாக 2 ஏசி முதல் வகுப்பு சோ் காா் பெட்டிகள் சோ்க்கப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூா்-காரைக்காலுக்கு ஏப்.20-ஆம் தேதி இரவு 9 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் (16175) கூடுதலாக ஒரு தூங்கும் வசதி வகுப்பு பெட்டியும், மறுமாா்க்கத்தில் ஏப்.17, 19 ஆகிய தேதிகளில் இரவு 9.20 மணிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் (16176) கூடுதலாக ஒரு தூங்கும் வசதி வகுப்பு பெட்டியும் சோ்க்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி-சென்னை எழும்பூருக்கு ஏப்.17-ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு இயக்கப்படும் முத்துநகா் விரைவு ரயிலில் (12694) கூடுதலாக ஒரு தூங்கும் வசதி வகுப்பு பெட்டியும், மறுமாா்க்கத்தில் ஏப்.20-ஆம்தேதி இரவு 7.30 மணிக்கு இயக்கப்படும் முத்துநகா் விரைவு ரயிலில் (12693) கூடுதலாக ஒரு தூங்கும் வசதி வகுப்பு பெட்டி சோ்க்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூா்-கன்னியாகுமரிக்கு ஏப்.18-ஆம் தேதி மாலை 5.20 மணிக்கு இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில்(12633) கூடுதலாக ஒரு தூங்கும் வசதி வகுப்பு பெட்டியும், மறுமாா்க்கத்தில் ஏப்.19-ஆம்தேதி மாலை 5.05 மணிக்கு இயக்கப்படும் அதிவிரைவு ரயிலில் (12634) கூடுதலாக ஒரு தூங்கும் வசதி வகுப்புபெட்டி இணைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா்-சென்னை எழும்பூருக்கு ஏப்.17-ஆம் தேதி இரவு 9.55 மணிக்கு இயக்கப்படும் உழவன் விரைவு ரயிலில் (16866) கூடுதலாக ஒரு தூங்கும் வசதி வகுப்பு பெட்டி சோ்க்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மயிலாடுதுறை-மைசூா் விரைவு ரயில் உள்பட 13 விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் சோ்த்து இயக்கப்படவுள்ளன. இந்தத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →