உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வா் உத்தரவு
மதுரை சித்திரைத் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
தமிழ்நாடுஉயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வா் உத்தரவு
மதுரை சித்திரைத் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
மதுரை சித்திரைத் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இரண்டு பேரின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மதுரையில் இன்று (16-4-2022) காலை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கிய நிகழ்வைக் காணும் பொருட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். கரோனா பாதிப்பால் இரண்டு ஆண்டுகளுக்குப் பின், இந்த வைபவம் நடப்பதால், பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்ட நிலையில், இன்று காலை அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் பங்குபெற்று, திரும்பும் வேளையில் கூட்டநெரிசலில் சிக்கி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடனும், 7 பேர் சாதாரண காயங்களுடனும் மதுரை இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தத் துயர சம்பவத்தை அறிந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், மிகவும் வேதனையுற்று, உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு, இச்சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கும் தலா ஐந்து லட்சம் ரூபாய் நிவாரணமும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து உடனடியாக நிவாரணம் வழங்கிட ஆணையிட்டுள்ளார்.