எதிர்க்கட்சித் துணை தலைவர் ஓ. பன்னீர்செல்வம் 
தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு விவகாரம்: அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் திங்கள்கிழமை கொண்டு வந்தனர்.

DIN

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் திங்கள்கிழமை கொண்டு வந்தனர்.

தமிழக சட்டப்பேரவை நான்கு நாள்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை கூடியது. இன்றைய கேள்வி நேரத்தில், முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சித் துணை தலைவர் ஓ. பன்னீர்செல்வம் உரையாற்றினார்.

தீர்மானம் குறித்து ஓபிஎஸ் பேசியதாவது:

“பேபி அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் ஏற்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால், தொடர்ந்து இடையூறு செய்து வருகின்றனர். அணையின் முழு அதிகாரமும் தமிழகத்திற்குதான் உள்ளது.

தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும்” என்றார்.

தொடர்ந்து அனைத்துக் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உசுரே நீதானே.... ஜனனி!

பூம்புகார் சங்கமத்துறையில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்!

தீரன் சின்னமலை நினைவு நாள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை!

விருதே வாழ்த்திய தருணம்: ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி!

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

SCROLL FOR NEXT