முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

விஷ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின்

சாலை விபத்தில் உயிரிழந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளனின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

DIN

சாலை விபத்தில் உயிரிழந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளனின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

83-ஆவது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக, தமிழகத்தை சேர்ந்த விஷ்வா தீனதயாளன் மற்றும் 3 வீர‌ர்கள் அசாம் மாநிலம் கௌகாத்தியில் இருந்து ஷில்லாங் நோக்கி நேற்று காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் உயிரிழந்தார்.

இந்நிலையில், உயிரிழந்த இளம் வீரரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் நேற்று மேகாலயா மாநிலத்தில் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கச் சென்றபோது, அங்கு சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயரமடைந்தேன்.

எதிர்காலத்தில் எத்தனையோ உலக சாதனைகளைப் படைப்பார் என்று நாம் எண்ணியிருந்த நிலையில், மிகவும் வருந்தத்தக்க வகையில் அவர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். இது அவரது பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எத்தகைய துயரத்தை அளித்திருக்கும் என்று எண்ணிப் பார்க்கிறேன். அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

விஷ்வா தீனதயாளன் அவர்களுடைய குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 10 இலட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகனின் திருமண வரவேற்பு தொகையை விவசாயிகளுக்குக் கொடுத்த எம்எல்ஏ!

ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? ஆபத்து

ராகுலின் குற்றச்சாட்டு தவறானவை, ஆதாரமற்றவை! தேர்தல் ஆணையம்

காஸா மூச்சுத் திணறுகிறது; இந்த பயங்கரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: முதல்வர் பதிவு

ஒரு ஏழைத்தாயின் மகன்... விமர்சனத்திற்கு ஆளாகும் ஜிவி பிரகாஷ்!

SCROLL FOR NEXT