முகப்பு
தமிழ்நாடு

10-ம் வகுப்பு தனித்தேர்வு: ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

நடப்பு கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:45 PM
பகிர்:

நடப்பு கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு(2021-22)க்கான  பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதியும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 ஆம் தேதியும்  பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 6 ஆம் தேதியும் தொடங்குகிறது. 

இதையடுத்து 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பங்களும் கடந்த மார்ச் 9ல் துவங்கி மார்ச் 16ல் முடிவடைந்தன. 

தொடர்ந்து, 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை(புதன்கிழமை) வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. 

தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை பிற்பகல் 2 மணி முதல் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →