தமிழ்நாடு

2017ல் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் விடுதலை

DIN

2017 ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட 24 பேரை விடுதலை செய்து மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் கடந்த 2017ல் போராட்டங்கள் வெடித்தன. அந்த நேரத்தில், மதுரை செல்லூர் ரயில் மேம்பாலத்தில் ரயிலை நிறுத்தி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்ததில் 24 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவித்து மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி நாகலட்சுமி இன்று உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT