முகப்பு
தமிழ்நாடு

‘தொழில்துறை பெயர் மாற்றப்படும்’: பேரவையில் அறிவிப்பு

தொழில்துறையின் பெயரை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை என மாற்றம் செய்யப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 11:56 AM
தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு
பகிர்:

தொழில்துறையின் பெயரை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை என மாற்றம் செய்யப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகின்றன. இன்று காலை கேள்வி நேரத்திற்கு பிறகு தொழில்துறை மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறையின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டது.

இந்த விவாதத்திற்கு பிறகு அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

தொழில்துறையின் பெயரை தொழில் முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் வர்த்தகத் துறை என மாற்றம் செய்யப்படும்.

மாநில அளவில் முதலீட்டு ஊக்கவிப்பு மற்றும் எளிதாக்கல் ஆணையரகம் உருவாக்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா ரூ. 1,800 கோடியில் 3,000 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்படும்.

சுற்றுச்சூழலின் தரத்தை மேம்படுத்த எத்தனால் கொள்கை 2022 வெளியிடப்படும்.

தஞ்சாவூர், உதகையில் ரூ. 70 கோடி மதிப்பில் மினி டைடல் பூங்கா அமைக்கப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →