தமிழ்நாடு

‘யுனெஸ்கோ அரங்கில் திருக்குறள் மாநாடு’: தமிழக அரசு

DIN

பாரிஸில் உள்ள யுனெஸ்கோ அரங்கில் திருக்குறள் மாநாடு நடத்தப்படும் என்று தமிழ் பண்பாடு மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று வருகின்றன. இன்று காலை கேள்வி நேரத்திற்கு பிறகு தொழில்துறை மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறையின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழ் பண்பாடு துறையின் கீழ் புதிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

1. திருக்குறளுக்கு ஐக்கிய நாட்டு கல்வி அறிவியல் பண்பாடு அமைப்பின்(யுனெஸ்கோ) அங்கீகாரம் கிடைக்கும் வகையில் பாரிசில் உள்ள யுனெஸ்கோ அரங்கில் திருக்குறள் மாநாடு நடத்த ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கப்படும்.

2. தமிழகம் முழுவதும் 6,218 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் மன்றங்களை மேம்படுத்தி ஆண்டிற்கு மூன்று தமிழ்க் கூடல் நிகழ்வுகளை நடத்த ரூ. 5.60 கோடி வழங்கப்படும்.

3. அனைத்துக் காட்சி ஊடகங்களுக்கும் தமிழ் உச்சரிப்பு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். தமிழை சிறப்பாக உச்சரிக்கும் ஊடகங்களுக்கு மாநில அளவில் சிறந்த தமிழ் உச்சரிப்பு விருது வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT