தமிழ்நாடு

சென்னையில் கூடுதலாக ஒரு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம்

DIN

சென்னையில் கூடுதலாக ஒரு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மானியக் கோரிக்கையில், 

1. மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 24 பள்ளிகள், நிறுவனங்களின் கட்டங்கள் ரூ.200 கோடி செலவில் மறுசீரமைக்கப்படும்.
2. தென் மாவட்டங்களில் செவித்திறன் குறைபாடுமைய 60 மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வியில் பி.காம்., பி.சி.ஏ., பாடங்கள் ரூ.18 லட்சத்தில் அறிமுகம்.
3. சென்னையில் ரூ.151 கோடி செலவில் கூடுதலாக ஒரு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அமைக்கப்படும்.
4. மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் கடன் உதவித் திட்டம், அறிவுசார் குறைபாடுடைய, புற உலக சிந்தனையற்றோர், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கு நீட்டித்து வழங்கும்வகையில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
5. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் திருமண நிதியுதவி திட்டம் மாற்றப்பட்டு முழுத் தொகையையும் ரொக்கமாக வழங்க நடவடிக்கை.
6. மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்க வயது உச்ச வரம்பு 45ல்இருந்து 60 ஆக நீட்டித்துரூ.148 கோடி செலவில் வழங்கப்படும்.
7. பொது கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிர்ல தடைகளற்ற சூழலை ஏற்படுத்தியுள்ள சிறந்த அரசு நிறுவனம், தனியார் நிறுவனத்திற்கு ரூ.160 லட்சம் செலவில் 2 மாநில விருதுகள் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT