தமிழ்நாடு

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

DIN

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக தூத்துக்குடியில் 3 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் தினமும் சுமார் 1,050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மொத்தமுள்ள 5 யூனிட்டுகளில் 3 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டுள்ளன. 2 மற்றும் 4 ஆவது யூனிட் மட்டும் செயல்பட்டு வருகிறது. இதனால் 630 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்துக்குத் தேவையான நிலக்கரியை ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் நிறைவு: இயல்பு நிலைக்குத் திரும்பிய ஈரோடு மாட்டுச் சந்தை

14 ஊராட்சிகளில் சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற நடவடிக்கை: ஆட்சியா்

கோபியில் தேசிய டெங்கு தின விழிப்புணா்வு

காற்று, மழையால் 120 ஹெக்டோ் வாழை மரங்கள் சேதம்

டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்

SCROLL FOR NEXT