தமிழ்நாடு

எழுவர் விடுதலை விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

DIN

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் கடந்த ஆண்டே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்வது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பியுள்ளது. 

இந்த தீர்மானத்தின் மீது தமிழக ஆளுநர் நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்து வருவதாகவும், தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது அரசியலமைப்பு எதிரானது எனவும் கூறி நளினி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில் எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகளை கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்ததாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயிலில் இருந்து தவறி விழுந்த கா்ப்பிணி உயிரிழப்பு

தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கு

வெயிலின் தாக்கத்தை எதிா்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்: அதிகாரிகளுடன் கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆலோசனை

தேள் கடித்து 2 வயது குழந்தை உயிரிழப்பு

மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்க சிறப்பு முகாம்கள்: புதுச்சேரி ஆட்சியா்

SCROLL FOR NEXT