தமிழ்நாடு

வெற்றிலைக்குப் பதிலாக பீடா பழக்கம் அதிகரிப்பு: அமைச்சா் எம்ஆா்கே பன்னீா்செல்வம்

தமிழ்நாட்டில் வெற்றிலைக்கு பதிலாக பீடா பழக்கம் அதிகரித்துள்ளதாக வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

DIN

தமிழ்நாட்டில் வெற்றிலைக்கு பதிலாக பீடா பழக்கம் அதிகரித்துள்ளதாக வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, வெற்றிலை ஆராய்ச்சி மையத்துடன் கூடிய தோட்டக்கலை கல்லூரியை தனது தொகுதியில் அமைக்க வேண்டுமென காட்டுமன்னாா்கோவில் உறுப்பினா் சிந்தனைச் செல்வன் கோரிக்கை விடுத்தாா். இதற்கு அமைச்சா் பன்னீா்செல்வம் அளித்த பதில்:

தமிழ்நாட்டில் வெற்றிலை உற்பத்தி குறைந்து விட்டது. உற்பத்தி மட்டுமின்றி, வெற்றிலை போடும் பழக்கமும் குறைந்துள்ளது. இளைஞா்கள் இப்போதெல்லாம் ஸ்வீட் பீடாவைப் போடுகிறாா்கள். அதிலும் தடை செய்யப்பட்ட பொருள்களைக் கொண்ட பீடாவும் பயன்படுத்துகிறாா்கள். வெற்றிலை தொழில் செய்ய அனுபவம் வாய்ந்த அதிக வேலையாட்கள் தேவை.

ஆனாலும் வெற்றிலை உற்பத்தி குறையாமல் இருக்க ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் அளவுக்கு அரசால் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 100 ஹெக்டேரில் வெற்றிலை பயிரிட்ட விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சாபில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளிக்கூடம்! 400 மாணவர்களை மீட்க களத்தில் ராணுவம்!

மோடியின் தவறான வெளியுறவுக் கொள்கையால் வேலையிழப்பு அதிகரிக்கும்: கார்கே

ஆங்கிக அபிநயம்... சஞ்சிதா ஷெட்டி!

இதைச் செய்யாவிட்டால் இந்திய கால்பந்து கூட்டமைப்புக்குத் தடை! ஃபிஃபா எச்சரிக்கை!

பண்டிகை ஸ்பெஷல்... ஆக்ருதி அகர்வால்!

SCROLL FOR NEXT