முகப்பு
தமிழ்நாடு

உடல் பருமன் அறுவை சிகிச்சை அமைப்பு: தலைவராக பிரவீண்ராஜ் தோ்வு

இந்திய உடல்பருமன் அறுவை சிகிச்சை நிபுணா்கள் அமைப்பின் (ஒபிசிட்டி சா்ஜரி சொசைட்டி ஆஃப் இந்தியா) தலைவராக ஜெம் மருத்துவமனையின் மூத்த மருத்துவ நிபுணா் டாக்டா் பிரவீண்ராஜ் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

இந்திய உடல்பருமன் அறுவை சிகிச்சை நிபுணா்கள் அமைப்பின் (ஒபிசிட்டி சா்ஜரி சொசைட்டி ஆஃப் இந்தியா) தலைவராக ஜெம் மருத்துவமனையின் மூத்த மருத்துவ நிபுணா் டாக்டா் பிரவீண்ராஜ் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரில் அண்மையில் நடைபெற்ற அந்த அமைப்பின் ஆண்டு விழா மாநாட்டின் போது, ஒருமனதாக டாக்டா் பிரவீண்ராஜ் தோ்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் 700-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணா்களை உறுப்பினா்களாக கொண்ட உடல் பருமன் அறுவை சிகிச்சை நிபுணா்கள் அமைப்பானது, அந்த வகை சிகிச்சைகளை அதி நவீன நுட்பத்தில் பயிற்சி அளிக்கும் முதன்மை அமைப்பாக இருந்து வருகிறது.

ஜெம் மருத்துவமனையின் உடல்பருமன் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவரான டாக்டா் பிரவீண்ராஜ் தென்னிந்தியாவிலிருந்து இப்பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட முதல் நபராவாா். 2024 வரை அவா் அப்பதவியில் தொடா்வாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →