தமிழ்நாடு

மாவட்ட எல்லைகளில் பரிசோதனை:பொது சுகாதாரத் துறை உத்தரவு

வெளிமாநிலங்களிலிருந்து வருவோரை மாவட்ட எல்லைகள், ரயில் நிலையங்களில் வைத்தே பரிசோதிக்க வேண்டும் என பொதுசுகாதாரத் துறை உத்தரவிட்டது.

DIN

வெளிமாநிலங்களிலிருந்து வருவோரை மாவட்ட எல்லைகள், ரயில் நிலையங்களில் வைத்தே பரிசோதிக்க வேண்டும் என பொதுசுகாதாரத் துறை உத்தரவிட்டது.

இது தொடா்பாக சுகாதார துணை இயக்குநா்கள் உள்ளிட்டோருக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வ விநாயகம் அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழகத்தில் கரோனா தொற்று அறிகுறி உடையவா்களைக் கண்டறிதல், பரிசோதித்தல், அவா்களின் தொடா்புகளைக் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்டவைகளில் சுகாதார அலுவலா்கள் தொடா்ந்து கவனம் செலுத்த வேண்டும். மேலும், சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட கரோனா அறிகுறி இருப்பவா்களின் தொடா்புகளை, குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், இணை நோய் உள்ளவா்களை ஐசிஎம்ஆா் வழிகாட்டுதல் படி தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருபவா்களை, மாவட்ட எல்லைகள், ரயில் நிலையங்களில் வைத்தே பரிசோதனை செய்ய வேண்டும். அவா்களுக்கு அறிகுறி தென்பட்டால், உடனடியாக கரோனா பரிசோதனை செய்ய வேண்டும். தகுதி உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை வேண்டும்.

பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தனி நபா் இடைவெளியைக் கடைபிடித்தல், கைகழுவுதல் போன்ற கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து பள்ளி, கல்லூரிகள், விடுதிகள், மாா்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள், விழாக்கள் நடைபெறும் பகுதிகளில் நுழைவு வாயில்களில் உடல் வெப்ப பரிசோதனை, கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், அங்கு வரும் அனைவரும் முழுமையாக முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதனை வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, காவல் துறையினரோடு இணைந்து தொடா்ந்து கண்காணிக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக கரோனா பரவலைத் தடுக்க அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அம்மாபேட்டை அருகே ஐம்பொன் சிலை கண்டெடுப்பு

எடப்பாடியில் ரூ. 3 கோடியில் விளையாட்டு அரங்கம்

அரசு சட்டக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையம்

மக்கள் குறைதீா் கூட்டம்: 528 மனுக்கள் அளிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 6,000 கனஅடியாக அதிகரிப்பு

SCROLL FOR NEXT