தமிழ்நாடு

நாங்களும் திறமையானவர்கள்! மாரத்தான் போட்டியில் பங்கேற்ற 50 திருநங்கைகள்!

கோவையில் முதன் முறையாக நடைபெற்ற திருநங்கைகளுக்கான மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

DIN

கோவையில் முதன் முறையாக நடைபெற்ற திருநங்கைகளுக்கான மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நோய்க்கான விழிப்புணர்வு, சமூக விழிப்புணர்வு, உலக அமைதி உள்ளிட்ட தலைப்பில் மாரத்தான் போட்டி நடைபெறும். இதில் பொதுவாக ஆண்கள் பெண்கள் என சிறுவர் சிறுமிகள் முதல் பெரியவர்கள் வரை மாரத்தான் ஓடுவது வழக்கம்.

இதற்கு மாற்றாக கோவையில் முதன் முறையாக சமூகத்தில் தாங்களும் திறைமையானவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் திருநங்கைகள், திருநம்பிகளுக்கான மங்கையவனன் பவுண்டேசன் சார்பில் டிரான்ஸ் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

கோவை நேரு விளையாட்டு மைதானம் முன்பு கோவை மாநகராட்சி பொது சுகாதாரகுழு தலைவர் மாரிசெல்வன் மற்றும் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்த மாரத்தான் போட்டி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று முடிவடைந்தது.

50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு பதக்கங்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு வெற்றி: தினப்பலன்கள்!

குஜராத் கண்காட்சி விமரிசை! 40 லட்சம் பக்தர்கள், 5000 காவலர்கள், 1000 பேருந்துகள்!

சோயா பீன்ஸ் பிரச்னை! சீன அதிபருடன் டிரம்ப் சந்திப்பு!

குலசை தசரா: இன்று சூரசம்ஹாரம்!

திருப்பூர்: கட்டாய ஆள்குறைப்புக்குத் தள்ளப்படும் சிறு, குறு நிறுவனங்கள்

SCROLL FOR NEXT