அண்ணாவின் சுயமரியாதை சுயாட்சி கொள்கைகளை மறந்து பாஜகவிற்கு அடிமையாகவே வலம் வந்துகொண்டிருக்கும் அதிமுகவினர் வெளிநடப்பு செய்வதில் ஆச்சரியம் இல்லை என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழி வகுக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த சட்ட மசோதா, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் ஆளுநரின் அதிகாரத்தை பறிக்கும் செயல் என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது: அண்ணாவின் சுயமரியாதை சுயாட்சி கொள்கைகளை மறந்து பாஜகவிற்கு அடிமையாகவே வலம் வந்துகொண்டிருக்கும் அதிமுகவினர் வெளிநடப்பு செய்வதில் ஆச்சரியம் இல்லை.
மேலும் மக்களுக்கு துரோகம் செய்பவர்களுக்கு அடிமையாக இருக்கும் வழக்கம் அவர்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.