மீண்டும் மஞ்சப் பை எக்ஸ்பிரஸ்: சுற்றுச்சூழல் துறை மானியக் கோரிக்கை
மீண்டும் மஞ்சப் பை எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்யப்படும் என்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் வனத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மானியக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மீண்டும் மஞ்சப் பை எக்ஸ்பிரஸ் அறிமுகம் செய்யப்படும் என்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் வனத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மானியக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தாக்கல் செய்த மானியக் கோரிக்கையில்,
மீண்டும் மஞ்சப் பை எக்ஸ்பிரஸ்
ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழியின் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முதல்வர் தொடங்கி வைத்த மீண்டும் மஞ்சப்பை பிரசாரத்தை வலுப்படுத்த, மீண்டும் மஞ்சப்பை எக்ஸ்பிரஸ் ரயில் கண்காட்சி என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
மீண்டும் மஞ்சப் பை எக்ஸ்பிரஸ் ரயில் நடமாடும் கண்காட்சி மாணவர்கள், சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்டோருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோயம்பேடு சந்தை வளாகத்தை கரிம மாசு இல்லாத வளாகமாக உருவாக்குதல்.
பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு மங்சப்பை விருதுகள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.