தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு: செந்தில் பாலாஜி

DIN


நடப்பாண்டில் தமிழகத்தில் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு புதிய மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்கெனவே 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்ட நிலையில் அமைச்சர் இதனை அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் தொழிலாளர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது எதிர்க்கட்சியின் கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, 2014ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை நிலுவையில் சிறப்பு முன்னுரிமையில் உள்ள விவசாய விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும்.

தமிழகம் முழுவதும் 2,000 சூரிய சக்தி பூங்கா நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 
தமிழகத்தில் 166 கோடி உயர் அழுத்த மின் மாற்றிகள் அமைக்கப்படும். மேலும், கேங்மேன் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக நல்ல தீர்வு எட்டப்படும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், குறுகிய அடித்தளம் கொண்ட மின்தளம் அமைக்கப்படும். தமிழகத்தில் மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும் மின் பாதைகளில் போதிய வசதிகள் செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

SCROLL FOR NEXT