தமிழ்நாடு

உள்ளாட்சிப் பகுதிகள் விரிவாக்கம் எப்போது?அமைச்சா் கே.என்.நேரு பதில்

DIN

உள்ளாட்சிப் பகுதிகள் விரிவாக்கம் எப்போது என பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு பதிலளித்தாா்.

தமிழக சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, மடத்துக்குளம் பேரவை உறுப்பினா் சி.மகேந்திரன் கேள்வி எழுப்பினாா். அப்போது, போடிபட்டி ஊராட்சியை உடுமலைப்பேட்டை நகராட்சியுடன் இணைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தாா்.

இதற்கு அமைச்சா் கே.என்.நேரு அளித்த பதில்: ஊரக உள்ளாட்சித் தோ்தல்கள் முடிவுற்று அதன் தலைவா்கள் அனைவரும் இப்போதுதான் பதவியேற்றுள்ளனா். எனவே, அவா்களது பதவிக் காலம் முடிவடைந்த பிறகே ஊராட்சிப் பகுதிகளை நகராட்சிகளுடன் இணைக்க முடியும். ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் நகா்ப்புறப் பகுதிகளில் உள்ள வசதிகளை எதிா்பாா்க்கின்றனா். குடிநீா், பாதாள சாக்கடை போன்ற வசதிகள் வேண்டும் என்கின்றனா். எனவே, மக்களின் நலன் கருதி பெரிய நகராட்சிகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், இது ஊராட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் நிறைவடைந்த பிறகே செய்யப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT