ராஜீவ்காந்தி மருத்துவமனை 
தமிழ்நாடு

தீ விபத்து நிகழ்ந்த ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வெடி சப்தம் (விடியோ)

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் அறுவை சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வந்த தளத்தில் இன்று 11 மணிக்கு திடீரென தீ விபத்து நேரிட்டது.

DIN

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கல்லீரல் அறுவை சிகிச்சைப் பிரிவு செயல்பட்டு வந்த தளத்தில் இன்று 11 மணிக்கு திடீரென தீ விபத்து நேரிட்டது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் இரண்டாவது டவர் பிளாக்கின் பின்புறத்தில் உள்ள கல்லீரல் அறுவை சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து நேரிட்ட நிலையில், திடீரென வெடிசப்தம் கேட்டது. வெடி சப்தத்தைத் தொடர்ந்து கரும்புகை வெளியேறி வருவதால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாகக் காட்சியளிக்கிறது.

மருத்துவ உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த அறையிலிருந்து மின் கசிவு காரணமாக தீ விபத்து  நேரிட்டதாக முதற்கட்ட செய்திகள் வெளியாகின.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மீட்புப் படையினர், மருத்துவமனை வளாகத்துக்குள் சிக்கிக் கொண்ட நோயாளிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிபத்து நேரிட்ட நிலையில், திடீரென அந்த கட்டடத்துக்குள் வெடி சப்தம் கேட்டது.  வெடி சப்தத்தைத் தொடர்ந்து கட்டடத்துக்குள் இருந்து கரும்புகை வெளியானது. இதனால், அந்த அறைக்குள் வெடிக்கும் வகையில் எந்தவிதமான பொருள்கள் இருக்கின்றன என்று தீயணைப்புத் துறையினர் கேட்டுவருகிறார்கள்.

தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணி நடந்து வரும் நிலையில், தீ விபத்து நிகழ்ந்த அறைக்குள் எத்தனை நோயாளிகள் சிக்கியிருக்கிறார்கள் என்பது குறித்த விவரம் உடனடியாக வெளியாகவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாகிஸ்தானில் 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆர்எஸ்எஸ் நினைவு நாணயம் அரசியலமைப்பை அவமதிக்கும் செயல்: மார்க்சிஸ்ட்!

வரிப் பகிர்வு: தமிழ்நாட்டிற்கு ரூ. 4,144 கோடி, உ.பி.க்கு ரூ. 18,227 கோடி விடுவிப்பு!

சுவையிலும் தரத்திலும் மனதை நிரப்பியதா? Idly Kadai - திரை விமர்சனம் | Dhanush | Arun Vijay

தரக்குறைவாக பதிவிடும் திமுகவினரை கைது செய்யாதது ஏன்? தமிழிசை

SCROLL FOR NEXT