மேட்டூர் நகராட்சியில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் 
தமிழ்நாடு

மேட்டூர் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம்: பணிகள் ஸ்தம்பித்தது

மேட்டூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

DIN


மேட்டூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேட்டூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளது. நகராட்சி பகுதியில் குப்பைகளை அள்ளுதல், கால்வாய் சுத்தம் செய்தல்,டெங்கு ஒழிப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதில் நிரந்தரமாக  74 தூய்மைப் பணியாளர்களும், ஒப்பந்த அடிப்படையில் 99 பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். 

ஒப்பந்த பணியாளர்களுக்கு ஒப்பந்ததாரர் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. 

கடந்த இரண்டு மாதமாக ஒப்பந்த பணியாளர்களும் சம்பளம் வழங்கவில்லை. இதனை கண்டித்து  இன்று காலை தூய்மைப் பணியாளர்  மேட்டூர் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று  நகராட்சியை வந்தடைந்தனர். 

பின்னர் நகராட்சியின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர். இதனால் இன்று காலை சுமார் 2 மணிநேரம் தூய்மைப் பணிகள் ஸ்தம்பித்தது. 

நகராட்சி ஆணையாளர் அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். சம்பளம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆணையாளரின் உறுதிமொழியை ஏற்ற பணியாளர்கள் 2 மணி நேரத்திற்குப் பிறகு தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கச் சங்கிலி பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது

ஆலங்குளம், கீழப்பாவூா், பெருமாள்பட்டி பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

பாவூா்சத்திரம் மின்வாரிய அலுவலகம் திறப்பு

சாதனை மாணவா்களுக்கு பாராட்டு

தென்காசி, செங்கோட்டை, சாம்பவா்வடகரையில் மின் தடை

SCROLL FOR NEXT