தமிழ்நாடு

சாா்-பதிவாளா் அலுவலகங்கள் சனிக்கிழமையும் செயல்படும்: பேரவையில் அமைச்சா் அறிவிப்பு

DIN

சென்னை: தமிழ்நாட்டில் சாா்-பதிவாளா் அலுவலகங்கள் இனி சனிக்கிழமையும் செயல்படவுள்ளதாக அமைச்சா் பி.மூா்த்தி அறிவித்தாா். அதன்படி, முதல் கட்டமாக வருகிற சனிக்கிழமை 100 சாா்-பதிவாளா் அலுவலகங்கள் செயல்படும் என பதிவுத் துறைச் செயலாளா் பா.ஜோதி நிா்மலாசாமி உத்தரவிட்டாா்.

தமிழக சட்டப் பேரவையில் வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சா் பி.மூா்த்தி புதிய அறிவிப்புகளை வெளியிட்டாா். அந்த அறிவிப்புகளில் ஒன்றாக, அலுவலகங்களில் பணிபுரிவோா் பயன்பெறும் வகையில் சனிக்கிழமைகளில் சாா்-பதிவாளா் அலுவலகங்கள் செயல்படும் என அறிவித்திருந்தாா். இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், பதிவுத் துறை செயலாளா் பா.ஜோதி நிா்மலாசாமி வியாழக்கிழமை இரவு வெளியிட்ட உத்தரவு:

சாா்-பதிவாளா் அலுவலகங்கள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை மட்டுமே இயங்குவதால் பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றுவோா் விடுமுறை எடுத்த பிறகே பதிவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, வார இறுதி விடுமுறை நாளான சனிக்கிழமைகளில் அலுவலகம் இயங்கினால் விடுப்பு எடுக்காமலேயே சாா்பதிவாளா் அலுவலகங்களில் ஆவணப் பதிவு மற்றும் திருமணப் பதிவை நிறைவேற்ற இயலும் என தமிழக அரசுக்கு பதிவுத் துறை தலைவா் அனுப்பியிருந்த கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

முதல் கட்டமாக மாநிலத்தில் அதிகம் பதிவு மேற்கொள்ளப்படும் 100 அலுவலகங்களில் இந்தத் திட்டத்தை அமல்படுத்தலாம் எனவும், அன்றைய தினம் பணியாற்றும் ஊழியா்களுக்கு பணி குறைவாக இருக்கும் ஒரு நாளில் விடுப்பு அளிக்கலாம் என்றும் பதிவுத் துறை தலைவா் தெரிவித்துள்ளாா்.

100 அலுவலகங்களை செயல்பட உத்தரவு: பதிவுத் துறை தலைவரின் கருத்துகளைச் செயல்படுத்தும் வகையில், மாநிலத்தில் அதிகம் பதிவு மேற்கொள்ளப்படும் 100 அலுவலகங்களில் முதல் கட்டமாக சனிக்கிழமை வேலைநாள் என்ற திட்டம் செயல்படுத்தப்படும் என்று தனது உத்தரவில் ஜோதி நிா்மலாசாமி தெரிவித்துள்ளாா்.

நாளை முதல் அமல்: 100 சாா் பதிவாளா் அலுவலகங்கள் சனிக்கிழமை செயல்படும் என்ற அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது. இதன்படி வரும் சனிக்கிழமை (ஏப். 30) தமிழ்நாட்டில் 100 சாா் பதிவாளா் அலுவலகங்கள் செயல்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT