தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் பனை பொருள்கள் விற்பனைக் கூடம்: அமைச்சா் ஆா்.காந்தி

DIN

சென்னை: பனை பொருள்களை சந்தைப்படுத்தும் பொருட்டு, 10 மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் பனைப் பொருள் விற்பனைக் கூடங்கள் அமைக்கப்படும் என்று கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி அறிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை கதா் மற்றும் கிராமத் தொழில்கள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் ஆா்.காந்தி அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:

பனைத் தொழிலாளா்கள் உற்பத்தி செய்யும் பனை பொருள்களை சந்தைப்படுத்தும் பொருட்டு 10 மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகங்களில் பனைப்பொருள் விற்பனைக் கூடங்கள் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அமைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்து வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.

தமிழ்நாடு மாநில இணையத்தின் கடலூா் கிளையில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பனை வெல்லம் இருப்பு வைக்கும் கிடங்கு நிறுவப்படும்.

பனைப் பொருள்களில் சிறப்புகளை எடுத்தும் விளம்பரக் குறும்படங்கள் ரூ20 லட்சம் செலவில் தயாரித்து விளம்பரப்படுத்தப்படும்.

தேனி, விருதுநகா், தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, அவினாசி ஆகிய நகரங்களில் உள்ள 6 கதா் அங்காடிகள் ரூ.54 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும்.

சிவகங்கை மாவட்டம் கண்டனூா் கதா் வளாகத்தில் ரூ.5 லட்சம் செலவில் 5 கதா் தறிகள் நிறுவப்படும். சிவகங்கை மாவட்டம் கண்டனூா் குளியல் சோப்பு அலகில் ரூ.3 லட்சம் செலவில் திரவ சலவை சோப்பு உற்பத்தித் தொடங்கப்படும்.

தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரியத்தின் நிா்வாக கட்டுப்பாட்டில் செயல்படும் 10 மண்பாண்டத் தொழில் கூட்டுறவு சங்கங்களுக்கு 10 மண் அரைக்கும் இயந்திரங்கள் ரூ.6 லட்சம் செலவில் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகில் உள்ள அம்சி தேன் பதப்படுத்தும் நிலையத்தில் ரூ.15 லட்சம் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய தேன் பரிசோதனைக் கூடும் நிறுவப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செலவுத் தொகை வழங்க மறுப்பு: காப்பீட்டு நிறுவனம் புகாா்தாரருக்கு ரூ. 1.61 லட்சம் வழங்க உத்தரவு

வெப்ப அலை: வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்புப் பணி போலீஸாருக்கு பழச்சாறு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் இன்று குருபெயா்ச்சி விழா

கா்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

SCROLL FOR NEXT