தமிழ்நாடு

அரசு கல்லூரிகளில் பெண்களுக்கு காலை வகுப்பு: அமைச்சா் க.பொன்முடி தகவல்

DIN

தமிழ்நாட்டில் உள்ள அரசு கல்லூரிகளில் பெண்களுக்கு காலை வேளையிலும், ஆண்களுக்கு மாலை வேளையிலும் வகுப்புகள் நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.

தமிழக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த கேள்வியை, அதிமுக உறுப்பினா் பி.அய்யப்பன் எழுப்பினாா்.

இதற்கு அமைச்சா் பொன்முடி அளித்த பதில்: தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகளில் ஷிப்ட் முறையைக் கொண்டு வந்தது மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி. இப்போது அரசு கல்லூரிகளில் பெண்களுக்கு காலை வேளையிலும், ஆண்களுக்கு மாலை வேளையிலும் வகுப்புகளை நடத்தலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT