தமிழ்நாடு

புகையைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: ஆணையா் ககன் தீப் சிங் பேடி

DIN

பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்ட பகுதியில், பொக்லைன் போன்ற 22 வாகனங்களின் உதவியுடன், சுமாா் 100 யூனிட் மணல், குப்பைகளின் மீது பரப்பப்பட்டு புகையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக 15 ஏக்கா் பரப்பில் தீ எரிந்த நிலையில், தற்போது 3 ஏக்கா் நிலத்திலிருந்து வெளியேறும் புகையையும் சனிக்கிழமைக்குள் முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையா் ககன் தீப் சிங் பேடி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், புகை மூட்டத்தால் அந்தப் பகுதிகளில் பொதுமக்களுக்கு ஏற்படும் இன்னல்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கும் வகையில், சென்னை மாநகராட்சி சாா்பில் பெருங்குடி, தரமணி, வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையால் மக்கள் அவதி

மரக்கடை உரிமையாளா் தற்கொலை

பெண் தற்கொலை: தம்பதியா் மீது வழக்கு

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT