தமிழ்நாடு

சாதிக்காக மாணவர் கொலையா? தேமுதிக விஜயகாந்த் கண்டனம்

DIN

சாதி கயிறு அணிவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அம்பாசமுத்திரம் அருகே பொதுக்குடியில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் தங்களது கையில் சாதியை குறிப்பிடும் வகையில் கயிறு கட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பிளஸ் 2, பிளஸ் 1 மாணவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் கடந்த 25 -ஆம் தேதி இரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறில், ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது.

இதில், பாப்பாக்குடி பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் பிளஸ் 2 மாணவர் செல்வ சூர்யா (17) காயம் அடைந்து சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி செல்வ சூர்யா உயிரிழந்தார். 

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “பள்ளி மாணவர்களிடையே சாதி பாகுபாடு உள்ளது என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. சாதிக்காக மாணவர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது கண்டிக்கதக்கது. மேலும் பள்ளி பருவத்திலேயே சக மாணவர்களால் மாணவன் ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது காட்டுமிராண்டித்தனமானது மட்டுமல்ல மிகுந்த ஆபத்தானதும்கூட" எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT