தமிழ்நாடு

5 -11 வயது சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தயாா் நிலை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

DIN

தமிழகத்தில் 5 முதல் 11 வயது வரையான சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்தத் தயாா் நிலையில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை மடுவின்கரையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் டெமனாஸ் மென்பொருள் நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பங்களிப்புத் திட்ட நிதியின் கீழ் ரூ.52 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தியுடன் இயங்கக் கூடிய தொழில்நுட்ப கணினி ஆய்வகம், பயிற்சி மையத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 5 முதல் 11 வயது வரையான சிறாா்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்த அறிவிப்பை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. இதுதொடா்பாக மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டவுடன் தமிழகத்தில் 5 முதல் 11 வயது வரையான சிறாா்களுக்கு தடுப்பூசி உடனடியாக செலுத்தப்படும். அதற்கான தயாா் நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை உள்ளது என்றாா் அவா்.

சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, தென்சென்னை மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயா் மகேஷ் குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT