முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

காவிரி கரையோர பகுதியில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:57 AM
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பகிர்:

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலியாக, உபரி நீர் அதிகளவில் திறக்கப்பட உள்ளதால் காவிரி கரையோர பகுதியில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாகவும் மற்றும் மேட்டூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 15 நாள்களுக்கு மேலாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியில் உள்ளது.

இதனால் மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர், அணையின் நீர் மின் நிலையம் வழியாகவும் 16 கண் பாலம் வழியாகவும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  மேட்டூர் அணைக்கு தற்போது  நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தற்போது 53 ஆயிரம் கனடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த தண்ணீர் அனைத்தும் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.  மேலும் அணைக்கு சுமார் 70 ஆயிரம் கன அடி நீர் வரை வர வாய்ப்புள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் உபரி நீராக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

 எனவே காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | பென்சில் கேட்டால் அம்மா அடிக்கிறார்: விலை உயர்வு குறித்து மோடிக்கு சிறுமி கடிதம்

இதனையடுத்து காவிரி கடையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வருவாய்த்துறையினர் அறிவிப்பு செய்து வருகின்றனர்.

கடந்த வாரம் இதே போல ஒரு லட்சத்துக்கு அதிகமான கன அடி நீர் உபரிநீராக திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் உபரி நீர் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

முழு கட்டுரையைப் படிக்க →