தமிழ்நாடு

நீந்தியபடியே கோடியக்கரை வந்த இலங்கை இளைஞர்கள்: விசாரணையில் திடீர் திருப்பம்

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை அருகே படகு கடலில் கவிழ்ந்ததால் இலங்கையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் நீந்தி கரை சேர்ந்ததாக கூறிய தகவல் தவறானது என்பது தெரிய வந்துள்ளதால் காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை, யாழ்ப்பாணம் மாவட்டம், பலாலி பகுதியைச் சேர்ந்த விசுவலிங்கம் மகன் ஜனார்த்தனன்(30), காந்தவடிவேல் மகன் ஜெசிகரன்(22) ஆகியோர் இலங்கையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை கண்ணாடியிழைப் படகு ஒன்றில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றதாகவும் அந்த படகு கவிழ்ந்தால் டீசல் கேன்களை பற்றிய நிலையில், செல்லக்கண்ணி வாய்க்கால் பகுதியில் நீந்தி கரை சேர்ந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் சென்ற வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய காவல் துறையினர் இருவரையும் மீட்டு, காவல் நிலைத்துக்கு அழைத்துச் சென்றனர். அதனை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் முதலில் தெரிவித்த தகவல்கள் தவறானது என்பது தெரிய வந்தது.

இந்நிலையில், இருவரும் கள்ளப் படகில் கரைக்கு வந்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இவர்கள் வருகையின் நோக்கம் குறித்து வேதாரண்யம் கடலோரக் காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

SCROLL FOR NEXT