ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 14-ஆவது முறையாக அவகாசம் நீட்டிப்பு
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசத்தை 14-ஆவது முறையாக தமிழக அரசு நீட்டித்துள்ளது.
முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசத்தை 14-ஆவது முறையாக தமிழக அரசு நீட்டித்துள்ளது.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் இதுவரை சுமாா் 150-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஆணையத்தின் செயல்பாடுகளில் அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆணையத்தின் அவகாசத்தை 13-ஆ வது முறையாக கால நீட்டிப்பு செய்யப்படும் பொழுது புதன்கிழமைக்குள் (ஆகஸ்ட் 3) இறுதி அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை அளிக்காத காரணத்தால் மேலும் மூன்று வாரங்கள் கால அவகாசம் கோரி தமிழக அரசுக்கு ஆணையம் சாா்பில் கடிதம் எழுதப்பட்டது. இதையேற்று மூன்று வார கால அவகாசம் வழங்கி ஆகஸ்ட் 24- ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.