முகப்பு
தமிழ்நாடு

மழை காரணமாக குறைந்த மின்சார நுகா்வு: அமைச்சா் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் மழை காரணமாக, மின்சார நுகா்வின் அளவு குறைந்துள்ளதாக அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:58 AM
பகிர்:

தமிழகத்தில் மழை காரணமாக, மின்சார நுகா்வின் அளவு குறைந்துள்ளதாக அமைச்சா் வி.செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாநில மின் பகிா்ந்தளிப்பு மையம், 24 மணி நேர மாநில மின் நுகா்வோா் சேவை மையமான மின்னகம் ஆகியவற்றை மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி, புதன்கிழமை ஆய்வு செய்தாா். இந்த ஆய்வினைத் தொடா்ந்து செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:-

தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லாத அளவுக்கு தொடா்ந்து சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. செவ்வாய்க்கிழமை 14 ஆயிரத்து 433 மெகாவாட்டாக இருந்த தமிழகத்தின் மொத்த பயன்பாடு, புதன்கிழமை மழையின் காரணமாக, 12 ஆயிரத்து 400 மெகாவாட்டாகக் குறைந்துள்ளது. இதில், காற்றாலைகள் மூலம் 4,100 மெகாவாட்டும், சூரிய மின் உற்பத்தி வழியாக 2,250 மெகாவாட் அளவுக்கும் மின்சார உற்பத்தி அடங்கும்.

தமிழகத்தைப் பொருத்தவரையில், எந்தப் பாதிப்பும் இல்லாமல் மாநிலத்தில் சீரான மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சா் செந்தில் பாலாஜி கூறினாா். செய்தியாளா் சந்திப்பின் போது, மின்வாரியத் தலைவா் ராஜேஷ் லக்கானி, இயக்குநா் மா.சிவலிங்கராஜன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →