முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் தண்டோரா அறிவிப்புக்குத் தடை: தலைமைச் செயலாளர் இறையன்பு

தமிழகத்தில் தண்டோரா அறிவிப்புக்குத் தடை விதித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார்.

Updated On : 3 ஆகஸ்ட் 2022, 3:21 pm IST
தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு
பகிர்:

சென்னை: தமிழகத்தில் தண்டோரா அறிவிப்புக்குத் தடை விதித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார்.

அறிவியல் வளர்ந்து தொழில்நுட்பம் பெருகி விட்டதால் தண்டோரா அறிவிப்பு இனி தேவையில்லை எனவும், ஒலிபெருக்கிகளை வாகனங்களில் பொருத்தி அனைத்து இடங்களுக்கும் தலவலை கொண்டு சேர்க்கலாம் என தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

தண்டோரா போட கடுமையான தடை விதிப்பது நல்லது எனவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

Advertisement

ஊராட்சி அமைப்புகள் வரை ஊடுருவுமளவு பரவலான விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என்று தலைமைச் செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார்.

மேலும், அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட நிலையில், மக்களுக்கு அரசு கூறும் தகவல்களை தெரிவிக்க தண்டோரா அறிவிப்பு   இனி தேவையில்லை என தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதிய கடிதத்தில்  தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments