கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணை முழு கொள்ளளவை எட்டியது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால் பொள்ளாச்சி அருகே உள்ள 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால், அணையின் நீர்மட்டம் 117.5 அடியை எட்டியது.
அணையின் பாதுகாப்பு கருதி அணையின் 11 மதகுகள் வழியாக வினாடிக்கு 2,750 கன அடி உபரி தண்ணீர் ஆழியாற்றில் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஆழியாறு கரையோரக் குடியிருப்பு மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஆற்றில் யாரும் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும் கால்நடைகளை ஆற்றில் இறக்கக்கூடாது எனவும் வருவாய்த் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
தொடர்ந்து காவல்துறையினர் தற்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.