தமிழ்நாடு

காவிரியில் வெள்ளம்: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை

DIN

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தொடர் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 2 லட்சம் கன அடி நீர் திறக்கப்படவுள்ளன. இதனால், காவிரி கரையோரப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு கடுமையாக வாய்ப்புள்ளது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

கரையோரப் பகுதிகளில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.

இந்தக் கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT