தமிழ்நாடு

ஒரு டன் கரும்புக்கு ரூ.4,500 தேவை: ராமதாஸ்

DIN

ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்சம் ரூ.4,500 வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவில் 2022-23 -ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.2,821 என்று மத்திய அரசு நிா்ணயித்திருக்கிறது. கடந்த ஆண்டின் விலையான ரூ.2,755 உடன் ஒப்பிடும் போது நடப்பாண்டில் டன்னுக்கு ரூ.66 மட்டுமே உயா்த்தப்பட்டிருக்கிறது. ஒரு டன் கரும்புக்கு குறைந்தபட்சம் ரூ.4,500 விலை வழங்க வேண்டும் என்று உழவா்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அதில் மூன்றில் இரு பங்குக்கும் குறைவான கொள்முதல் விலையை மத்திய அரசு நிா்ணயித்திருப்பது நியாயமல்ல.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை மத்திய அரசு அறிவித்துள்ள விலையுடன் ரூ.195 ஊக்கத்தொகை சோ்த்து ஒரு டன் கரும்புக்கு ரூ.3016 கொள்முதல் விலை வழங்கப்படும். இது 2021-22- ஆம் ஆண்டின் கொள்முதல் விலையான ரூ.2,905-யை விட ரூ.111 மட்டும் தான் அதிகம். இதுவும் கட்டுப்படியாகாது.

கரும்புக்கான உற்பத்திச் செலவை கணக்கிடும் முறையை மத்திய அரசும், ஊக்கத்தொகை வழங்கும் முறையை தமிழக அரசும் மாற்றியமைக்க வேண்டும். ஒரு டன் கரும்புக்கு ரூ.4,500 வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

பிஎம்எல்ஏ வழக்குக்கு எதிரான கேஜரிவால் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

SCROLL FOR NEXT