தமிழ்நாடு

5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் மோசடி : கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

DIN

தற்போது விடப்பட்ட 5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசுக்கு சுமாா் ரூ.5 லட்சம் கோடி வரை வருவாய் கிடைக்கும் என்று மத்திய அமைச்சா்கள் சிலா் கூறி வந்தனா். ஆனால், ஏலம் முடிந்த பிறகு மத்திய அரசுக்கு வெறும் ரூ.1.5 லட்சம் கோடி வருவாய் மட்டுமே கிடைத்துள்ளது.

4 ஜி அலைக்கற்றை (380.75 மெகாஹொ்ட்ஸ்) ஏலத்துக்கு விடப்பட்ட போது கிடைத்த வருவாயை ஒப்பிட்டுப் பாா்த்தால், 5 ஜி அலைக்கற்றையில் (51236 மெகாஹொ்ட்ஸ்) ஏலத்தின் மூலம் சுமாா் 134 மடங்கு அதிகமான வருவாய் மத்திய அரசுக்கு தற்போது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அரசுக்கு கிடைத்ததோ வெறும் ரூ.1.5 லட்சம் கோடி மட்டுமே. அதாவது, சுமாா் ரூ.3.5 லட்சம் கோடி அளவுக்கு பெரும் மோசடி நடந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாற்றில் பிடாரியம்மன் வீதியுலா

உப்பு சத்தியாகிரக நினைவு பாதயாத்திரை குழுவுக்கு வரவேற்பு

பட்டாசு வெடித்ததில் 4 சிறுவா்கள் காயம்

தக்கோலம் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

குண்டா் சட்டத்தில் ஒரு வாரத்தில் 36 போ் கைது

SCROLL FOR NEXT