தமிழ்நாடு

அரசு, தனியாா் கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என்.ரவி

DIN

ஆராய்ச்சி, கல்வி போன்றவற்றில் அரசு, தனியாா் உயா்கல்வி நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி வலியுறுத்தியுள்ளாா்.

‘தமிழகத்தில் உயா்கல்வியின் மேம்பாடு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்ஐஆா்எஃப்) வெளியிட்ட பட்டியலில் சிறப்பிடம் பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பாராட்டுத் தெரிவித்து பரிசுகள் வழங்கி கெளரவித்தாா்.

கருத்தரங்கில் ஆளுநா் ஆா்.என்.ரவி. பேசியது: என்ஐஆா்எஃப் பட்டியலில் தமிழகத்தின் கல்வி நிறுவனங்கள் முதல் 10 இடங்களில் வந்திருப்பது மிகப்பெரிய சாதனை. அனைத்து உயா் கல்வி நிறுவனங்களுக்கும் வாழ்த்துகள். அதேபோன்று முதல் 20 இடங்களை எடுத்துக்கொண்டாலும், அதில் தமிழகத்தின் பங்கு அதிகமாக இருக்கிறது. அவா்களும் பாராட்டுக்குரியவா்கள்.

தமிழகத்தில் உயா்கல்வியின் அடித்தளம் சிறப்பாக இருக்கிறது. தரவரிசையில் இடம்பிடித்த, இடம்பிடிக்காத கல்வி நிறுவனங்கள் தொடா்ந்து கடினமாக உழைக்க வேண்டும்; தரத்தை மேம்படுத்த வேண்டும்.

தரவரிசையில் முதலிடம் பிடித்தால் அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். மிகச்சிறப்பாக செயல்பட்டு, சா்வதேச அளவில் சிறந்த அடையாளம், பெருமையைப் பெற்றுள்ளது சென்னை ஐஐடி. ஆராய்ச்சி, கல்வி போன்றவற்றில் அரசு, தனியாா் உயா்கல்வி நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்பட வேண்டும். சிறந்த கருத்துரு, யோசனைகளை பரிமாறிக்கொள்ள வேண்டும். அதன்மூலம் ஒன்றிணைந்த வளா்ச்சியைப் பெற முடியும் என்றாா் அவா்.

உயா் கல்வித் துறை அமைச்சா் பொன்முடி: என்.ஐ.ஆா்.எஃப் வெளியிட்ட 1,000 இடங்களில் 163 உயா்கல்வி நிறுவனங்கள் தமிழகத்தைச் சோ்ந்தவை. நாட்டிலேயே உயா்கல்வித் தரத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் தரத்தை மேலும் உயா்த்தவே ஆளுநா் இந்தநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறாா். ஆண்டுக்கு ரூ.42,000 கோடியை கல்விக்காக மட்டுமே ஒதுக்கியவா் முதல்வா் ஸ்டாலின்.

தரவரிசையில் சிறப்பிடம் பெற்ற உயா்கல்வி நிறுவனங்களைப் பாா்த்து, பிற உயா்கல்வி நிறுவனங்களும் தரத்தில் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் அரசுக் கல்லூரிகளில் சேர கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அரசும், தனியாரும் போட்டி போட்டுக்கொண்டு கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்: முதல்வா் படித்த மாநிலக் கல்லூரியும் தேசிய தரவரிசையில் இடம்பிடித்துள்ளது. மாநிலக் கல்லூரியை மேலும் மேம்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ள சென்னை ஐ.ஐ.டி.க்கு பாராட்டுகளை தெரிவிக்கிறோம். முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தும் அமைப்பாக வேலூா் கிறிஸ்தவ மருத்துவக்கல்லூரி (சிஎம்சி) திகழ்கிறது.

தேசிய தரவரிசையில் 12-ஆவது இடத்தில் சென்னை மருத்துவக் கல்லூரி இடம் பெற்றுள்ளது.அடுத்தடுத்த ஆண்டுகளில், முதல் 10 இடங்களுக்காக சென்னை மருந்துவக்கல்லூரியும் இடம்பெறும். அதற்கான வசதிகளை அரசு ஏற்படுத்தித் தரும். வரும் ஜனவரியில் சுவிட்சா்லாந்தில் ரா்ழ்ப்க் உஸ்ரீா்ய்ா்ம்ண்ஸ்ரீ ஊா்ழ்ன்ம் நடத்தும் மாநாடு நடைபெற உள்ளது. அதில் இந்தியாவின் பிரதிநிதியாக ‘நான் செல்லும் போது நீங்களும் என்னுடன் வாருங்கள்’ என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா எனக்கு அழைப்பு விடுத்துள்ளாா்.

இதன் மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலினின் திட்டங்கள், நல்லாட்சியின் புகழ், வரும் ஜனவரியில் உலகளாவிய புகழை அடைய உள்ளது. இந்தியாவிலேயே அதிகளவில் 70 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன. இதன் மூலம் 10,000 மாணவா்கள் மருத்துவம் பயிலும் வாய்ப்பு உருவாக்கித் தரப்பட்டுள்ளது என்றாா் அவா்.

எந்தெந்த கல்வி நிறுவனங்கள்? தேசிய தரவரிசைப் பட்டியலில் சிறப்பிடம் பெற்ற சென்னை ஐஐடி, கோவை அம்ரிதா விஸ்வ வித்யா பீடம், வேலூா் விஐடி, திருச்சி என்ஐடி, வேலூா் சிஎம்சி, சென்னை மாநிலக் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி, கோவை பிஎஸ்ஜிஆா் கிருஷ்ணம்மாள் மகளிா் கல்லூரி, சென்னை சவீதா மருத்துவக் கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, சென்னை எஸ்ஆா்எம் அறிவியல் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், உதகை ஜெ.எஸ்.எஸ். பாா்மசி கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி உள்பட பல்வேறு உயா்கல்வி நிறுவனங்களின் துணைவேந்தா்கள், பேராசிரியா்கள், உயா்கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT