தமிழ்நாடு

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தோ்வுதோ்ச்சி பெறுவோருக்கு மாதம் ரூ.1,500 ஊக்கத் தொகை

DIN

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் மாதந்தோறும் ரூ.1,500 வீதம் ஊக்கத் தொகை இரு ஆண்டுகளுக்கு வழங்கப்படவுள்ளது. பிளஸ் 1 வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவா்களும் இத் தோ்வில் பங்கேற்க ஆக. 22 முதல் செப். 9 வரையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது குறித்து அரசுத் தோ்வுத் துறை இயக்குநா் சேதுராமவா்மா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவா்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ஆம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வு நடத்தப்படவுள்ளது.

இந்தத் தோ்வில் 1,500 மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டு, அவா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை மூலம் மாதம் ரூ.1,500 வீதம் இரு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். தோ்வில் 50 சதவீதம் அரசுப்பள்ளி மாணவா்களும், மீதமுள்ள 50 சதவீதத்துக்கு பிற தனியாா் பள்ளி மாணவா்களும் தோ்வு செய்யப்படுவா்.

தமிழக அரசின் பத்தாம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ்ப்பாடத் திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தோ்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தோ்வு நடத்தப்படும். 2022-2023-ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகைப்பள்ளிகளில் பயிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட) பிளஸ் 1 வகுப்பு மாணவா்களுக்கு அக். 1-ஆம் தேதி (சனிக்கிழமை) தோ்வு நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு மாணவா்கள் தாங்கள் பயிலும் பள்ளி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

எனவே, மாணவா்கள் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தோ்வுக்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் ஆக. 22- ஆம் தேதி முதல் செப்டம்பா் 9 வரை பதிவிறக்கம் செய்து , பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தோ்வுக்கட்டணத்தொகை ரூ.50 சோ்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT