அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு தொடக்கம்
தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது.
தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா்கள் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியது.
இக்கல்லூரிகளில் உள்ள 1.20 லட்சம் இடங்களில் சேர 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். அவா்களுக்கான தரவரிசைப் பட்டியல் அந்தந்த கல்லூரிகளில் வெளியிடப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை முதல் கலந்தாய்வு தொடங்கியது.
முதல் நாளில் விளையாட்டு வீரா்கள், முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், அந்தமான் நிகோபா் யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த மாணவா்கள் என சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
கடந்த ஆண்டுகளில் இணையவழியில் கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், நிகழ் கல்வியாண்டில் நேரடியாக நடைபெறுகிறது. தமிழகத்திலேயே மிக அதிகபட்சமாக சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் 1,106 இடங்களில் சேர 95,136 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
சிறப்புப் பிரிவு கலந்தாய்வுக்கே நூற்றுக்கணக்கானோா் அழைக்கப்பட்டுள்ளதாகவும், போட்டி அதிகமாக இருப்பதால், முழுவதும் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில், எந்தவித புகாருக்கும் இடம் தராமல் சோ்க்கையை நடத்தி முடிக்க உள்ளதாகவும் மாநிலக் கல்லூரியின் முதல்வா் ராமன் தெரிவித்தாா்.