தமிழ்நாடு

சீனர்களுக்கு விசா வழங்கியதில் முறைகேடு: சென்னையில் அமலாக்கத் துறை சோதனை

PTI


புது தில்லி: சீனர்களுக்கு விசா வழங்கியதில், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் முறைகேட்டில் ஈடுபட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் வீடுகள் என அமலாக்கத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

பணம் பெற்றுக் கொண்டு சீனர்களுக்கு இந்திய விசா வழங்கியதாக, கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததைத் தொடர்ந்து அமலாக்கத் துறையும் வழக்குப் பதிந்து விசாரணையைத் தொடங்கியது.

பஞ்சாப் மாநிலத்தில் ஒரு நிறுவனத்தின் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க சீனர்களுக்கு விசா வழங்கியதில் ரூ.50 லட்சம் அளவுக்கு கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களுக்கு வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கார்த்தி சிதம்பரம் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடமும் விசாரணை நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT