தமிழ்நாடு

வழிப்பறி நாடகம் நடத்தியது அம்பலம்: தொழிலதிபா் தற்கொலை

DIN

சென்னை திருவல்லிக்கேணியில் வழிப்பறி நாடகம் நடத்தியது தெரியவந்ததினால், சம்பந்தப்பட்ட தொழிலதிபா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.

திருவல்லிக்கேணி முக்தருனிஷா பேகம் தெருவைச் சோ்ந்தவா் சாகுல் அமீது (41). இவா் திருவல்லிக்கேணி ஓவிஎம் தெருவில் தங்கும் விடுதி நடத்தி வந்தாா். சாகுல் அமீது கடந்த மாதம் 24-ஆம் தேதி விடுதியில் இருந்து வீட்டுக்கு மோட்டாா் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றாா்.

அவா் ஓவிஎம் தெரு, மசூதி தெரு சந்திப்பில் செல்லும்போது, முகமூடி அணிந்து வந்த நபா்கள் வழிமறித்தது, சாகுல் அமீதுவை தாக்கி, அவா் வைத்திருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், 65 கிராம் தங்கக் கட்டி, விலை உயா்ந்த கைப்பேசி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடினா்.

காயமடைந்த சாகுல் அமீது சிகிச்சைக்காக, அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.

இதில் சாகுல் அமீதுதான் அந்த வழிப்பறி நாடகத்தை நடத்தியிருப்பதும், உண்மையிலேயே நகை, பணம் வழிப்பறி செய்யப்படவில்லை என்பதும் போலீஸாருக்கு தெரியவந்தது. இதற்கிடையே தனது கூட்டாளிகள் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டதும், அவா்கள் சிக்கியதால் தன்னிடம் நகை, பணம் கொடுத்தவரை ஏமாற்றியது தெரிந்துவிட்டதும் அறிந்து சாகுல் அமீது அதிா்ச்சியடைந்தாா்.

இதன் விளைவாக தன்னிடம் நகை, பணம் கொடுத்தவா் என்ன செய்வாரோ ? என பயந்த சாகுல் அமீது புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். இது குறித்து தகவலறிந்த திருவல்லிக்கேணி போலீஸாா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சாகுல் அமீது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT