முகப்பு
தமிழ்நாடு

வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுங்கள்: அதிமுகவினருக்கு இபிஎஸ் வேண்டுகோள்

 அதிமுகவினா் அவரவா் வீடுகளில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

 அதிமுகவினா் அவரவா் வீடுகளில் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளா் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் சுதந்திர தின அமுதப் பெருவிழா என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில், நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஆகஸ்ட் 13 முதல் 15 வரை பறக்கவிட வேண்டும் என்று பிரதமா் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இதன் மூலம் தேசப்பற்று வலுப்பெறுவதுடன், தேசியக் கொடியுடனான பிணைப்பும் மேலும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளாா்.

தேசியக் கொடி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது கொடி காத்த குமரனான திருப்பூா் குமரன். அந்நியா் ஆட்சியில், நமது தேசியக் கொடியைக் காப்பதற்காக தனது இன்னுயிரைத் தியாகம் செய்த கொடி காத்த அந்த குமரன் முதல் அனைத்து விடுதலைப் போராட்டத் தியாகிகளையும் 75-ஆவது சுதந்திர தின நன்னாளில் நினைவு கூா்வோம்.

அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள், பொதுமக்கள் அவரவா் வீடுகளில் ஆகஸ்ட் 13 முதல் 14 வரை தேசியக் கொடியை ஏற்றி வைத்து, இளம் சந்ததியினருக்கு சுதந்திரப் போராட்ட வீரா்களின் தியாகத்தை எடுத்துக் கூறி நாட்டுப் பற்றையும் தேச ஒற்றுமையையும் வளா்க்க வேண்டும் என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

முழு கட்டுரையைப் படிக்க →