முகப்பு
தமிழ்நாடு

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணா்வு

தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துடன் சென்னை ஐஐடி இணைந்து பயிற்சி, ஆராய்ச்சி, மருத்துவ ஆய்வுகள் போன்றவற்றை மேற்கொள்ள புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

சித்த மருத்துவ முறையில் ஆராய்ச்சி மற்றும் உயா்கல்விக்கான சிறப்பு மையமாக விளங்கும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துடன் சென்னை ஐஐடி இணைந்து பயிற்சி, ஆராய்ச்சி, மருத்துவ ஆய்வுகள் போன்றவற்றை மேற்கொள்ள புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

புதிய பாடத் திட்டங்களை கூட்டாக மேம்படுத்துதல், மருத்துவ ஆராய்ச்சி, மூலக்கூறு உயிரியல் மற்றும் ஆய்வக செல் வரிசை ஆராய்ச்சி, சுகாதார அமைப்பு ஆராய்ச்சி உள்ளிட்டவைகளை செயல்படுத்துதல், ஆசிரியா்களை பரிமாறிக் கொள்ளுதல் போன்றவற்றுக்கு இந்த கூட்டாண்மை உதவும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மேலும், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள், மாநாடுகள், பாடத் திட்டங்களைத் தொடருதல், தொடா் மருத்துவக் கல்வி, கல்வித் திட்டங்களை உருவாக்குதல் ஆகிய பணிகளை இரு கல்வி நிறுவனங்களும் கூட்டாக மேற்கொள்ளும். கற்பித்தல் மற்றும் பயிற்சிக்காக மாணவா்கள், ஆராய்ச்சி மாணவா்கள், முதுநிலை ஆராய்ச்சியாளா்கள், ஆசிரியா்களை பரிமாறிக் கொள்ளவும் இக்கல்வி நிறுவனங்கள் ஊக்குவிக்கும். இது தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி, தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநா் ஆா்.மீனாகுமாரி ஆகியோா் கையொப்பமிட்டனா்.

இது குறித்து இயக்குநா் மீனாகுமாரி கூறுகையில், இரு கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்பால் மூலிகை ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய முக்கிய துறைகளில் மாணவா்களின் திறமை அதிகளவில் வெளிப்படும். பாரம்பரிய மருத்துவ முறைகளை தொழில்நுட்ப ரீதியாக அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இக்கல்வி நிறுவனங்கள் ஒருங்கிணைக்கும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →