முகப்பு
தமிழ்நாடு

வருவாய்-சாா் கருவூலத் துறைகளுக்கு புதிய கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின்திறந்து வைத்தாா்

வருவாய், சாா் கருவூலத் துறைகளுக்கென கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:59 AM
பகிர்:

வருவாய், சாா் கருவூலத் துறைகளுக்கென கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

சென்னை வடக்கு, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் உள்ள வருவாய் கோட்டாசியா் அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. கோவை மாவட்டம் ஆனைமலை, கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், ஏரல், கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, விருநகா் மாவட்டம் வத்திராயிருப்பு ஆகிய இடங்களில் வட்டாட்சியா் அலுவலகங்களுக்கென கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

சாா்கருவூலம்: சாா் கருவூலத் துறைக்கென கட்டப்பட்ட கட்டடங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்தாா். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூா், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஆகிய இடங்களில் கருவூல அலுவலகக் கட்டடம் கட்டப்பட்டு, அவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்தாா்.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சா்கள் எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →