தமிழ்நாடு

புதுச்சேரி சுயேச்சை எம்எல்ஏ மகன் மாயம்: போலீஸ் விசாரணை

புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் தனது மகன் திலகரசர் காணவில்லை என போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் திலகரசரைத் தேடி வருகின்றனர். 

DIN


புதுச்சேரி சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் தனது மகன் திலகரசர் காணவில்லை என போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் திலகரசரைத் தேடி வருகின்றனர். 

புதுச்சேரி மாநிலம், திருபுவனை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அங்காளன்(52). இவர், புதுச்சேரி அருகே திருக்கனூர் செல்லிப்பட்டு புதுகாலனி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 

இவரது மகன் திலகரசர் (28). திருமணமாகாத நிலையில் வீட்டிலிருந்தவர், வியாழக்கிழமை பகல் 11 மணியளவில் வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த எம்.எல்.ஏ. அங்காளன் மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், திலகரசர் எழுதிய கடிதம் வீட்டில் சிக்கியது. அதில், வீட்டை விட்டு தனது தாயிடம் செல்வதாக எழுதப்பட்டு இருந்ததாம். 

இது தொடர்பாக திருக்கனூர் போலீசில் அங்காளன் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து, காணாமல் போன திலகரசரைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனவு நனவானது!

சபரிமலை சீசன்: போத்தனூா் வழித்தடத்தில் சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து

"விக்' நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

SCROLL FOR NEXT