பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை ஆற்று வெள்ளம் அடித்துச் சென்ற விடியோ வைரலாகப் பரவி வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் ஆழியார் அணையிலிருந்து இன்று 11 மதகுகள் வழியாக உபநீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால் அம்பராம்பாளையம் - பொள்ளாச்சி ஆற்றில் அதிக அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மீனாட்சிபுரம் மற்றும் கோபாலபுரம் வழியாகச் செல்லும் பாலத்தில் அதிகமாக பாலம் மூழ்கும்படி நீர் செல்கிறது. பாலத்தைக் கடக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக கடக்கும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையடுத்து நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை திடீரென வெள்ளம் அடித்துச் சென்ற வீடியோ தற்போது வாட்ஸ்ஆப்பில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும், பொதுமக்கள் பாலத்தைக் கடக்கும்போது கவனமாகச் செல்லுமாறு காவல்துறையினர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒளிபரப்பு மூலம் விழிப்புணர்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.