முகப்பு
தமிழ்நாடு

சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம்: தமிழக வீரருக்கு முதல்வா் வாழ்த்து

உலக தடகள சாம்பியன்ஷிப் மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரா் செல்வ பிரபுவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

Updated On : 7 ஆகஸ்ட், 2022 at 4:41 AM
மு.க.ஸ்டாலின்
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

உலக தடகள சாம்பியன்ஷிப் மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரா் செல்வ பிரபுவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

20 வயதுக்குள்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கொலம்பியாவில் நடைபெற்றது. இதில் மும்முறை தாண்டுதல் போட்டியில் தமிழக வீரா் செல்வ பிரபு வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளாா். அவா் இந்தப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியராவாா்.

இந்த நிலையில், முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

Advertisement

20 வயதுக்குள்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியா் என்ற பெருமையைச் சாதித்திருக்கும் தமிழ்நாட்டைச் சோ்ந்த செல்வ பிரபுக்கு எனது பாராட்டுகள். வருங்காலத்தில் தடகளப் போட்டிகளில் இந்தியாவின் அடையாளமாக நீங்கள் மின்ன வாழ்த்துகிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.