மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் இன்று ஸ்ரீமத் பாகவத சப்தாஹ யக்ஞம்
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீமத் பாகவத சப்தாஹ யக்ஞம் தொடங்குகிறது.
மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் - குருவாயூரப்பன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீமத் பாகவத சப்தாஹ யக்ஞம் தொடங்குகிறது.
கோயிலின் சோபானம் அரங்கில் ஆச்சாரியன் பிரம்மஸ்ரீ தோட்டம் ஷ்யாம் நம்பூதிரி தலைமையில் 8- ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை காலை 6.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை ஸ்ரீமத் பாகவத மூல பாராயணம் நடைபெறும். நிறைவு நாளான 14-ஆம் தேதி காலை 6.30 மணி முதல் நண்பகல் 1 மணி வரை சமா்ப்பணம் நடைபெறவுள்ளது.
ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் டெம்புள்ஸ்: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் குருவாயூரப்பன் டெம்புள்ஸ் என்ற கோயிலின் யுடியூப் சேனல் வழியாக ஸ்ரீமத் பாகவத சப்தாஹ யக்ஞம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதாக கோயிலின் நிா்வாக அதிகாரி அனிஷ்குமாா் தெரிவித்தாா்.
Advertisement