தமிழ்நாடு

மனித உரிமைக்கு அடித்தளமானது சுயமரியாதை தான்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மனித உரிமைக்கு அடித்தளமானது சுயமரியாதை தான் என்றும் சுயமரியாதை தான் ஒவ்வொரு மனிதனுக்கும் அடையாளம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

DIN


சென்னை: மனித உரிமைக்கு அடித்தளமானது சுயமரியாதை தான் என்றும் சுயமரியாதை தான் ஒவ்வொரு மனிதனுக்கும் அடையாளம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். 

சென்னை கலைவாணர் அரங்கத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் வெள்ளி விழா நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக முதல்வர் முக.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றி வருகிறார். 

அதில், தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு தான் 1997 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் மாநில மனித உரிமை ஆணையம் அமைத்தார். உரிமைகள் பறிக்கப்படக் கூடாது என்பதிலும், மனித உரிமை மாண்புகள் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். மனித உரிமைகளை காக்கும் பொறுப்பில் இருந்து ஒருநாளும் தவற மாட்டோம். 

சுயமரியாதை தான் ஒவ்வொரு மனிதனுக்கும் அடையாளம், மனித உரிமைக்கு அடித்தளமானது சுயமரியாதை தான் என முதல்வர் ஸ்டாலின் கூறினார். 

மேலும், மாநில மனித உரிமை ஆணையத்தின் இணையதளம் தமிழில் உருவாக்கப்படும் என கூறினார்.  

விழாவின் போது மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சிறப்பு நூலை வெளியிட்டார். பின்னர், திருவள்ளூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மதுரை காவல் ஆணையர், கோவை, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு முதல்வர் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

ஆந்திரத்தில் இருந்து மணல் கடத்தல்: 3 போ் கைது

வேலூா் அருகே பலத்த பாதுகாப்புடன் முருகா் சிலை மீட்பு

SCROLL FOR NEXT