தமிழ்நாடு

5 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

DIN

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், மதுரை மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்கக் கடல், லட்சத்தீவு, கேரளம், கர்நாடகம், கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக் கடலில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT